major depression

தீவிர உளச்சோர்வு

தமிழ் விளக்கம்

உளச்சோர்வு என்பது உளப்பாங்குச் சீர்கேடுகளில் மிக முக்கியாமான ஒன்று. அன்றாடப் பணிகளில் ஆர்வம் காட்டாமலிருத்தல், எரிச்சல் படுதல், பசியின்மை, தூக்கமின்மை அல்லது மிகுதூக்கம், சிற்றின்ப நாட்டமின்மை, களைப்பு, உளக் கிளர்ச்சி, இயலாமை உணர்வு, நம்பிக்கையின்மை, எதிலும் காவனம் செலுத்த இயலாமை, தற்கொலை எண்ணங்கள் போன்றவை உளச்சோர்வின் அறிகுறிளாகும். உளச்சோர்வுச் ஒற்றை நிகழ்வாகவோ (single episode) அல்லது தொடர்ச்சியான விசமரோகமாகக் (recurrent episode) கூட இருக்கலாம். ஒற்றை நிகழ்வில் மேலே சொன்ன அறிகுறிகளில் குறைந்த பட்சம் நான்காவது இருவாரங்களுக்கு மேல் நீடித்திருக்கும். தொடர்ச்சியான விசமரோகத்தில் உளச்சோர்வு மீண்டும் மீண்டும் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்திருக்கும். உளச்சோர்வு இருமுனை உணர்வுக் கிளர்ச்சியிலிருந்து (bipolar) வேறுபட்டது. உளச்சோர்வுள்ளவர்களுக்கு கிளர்ச்சி ஏற்படாது. உளச்சோர்வு மனச்சலிப்பிலிருந்து வேறுபட்டது. மனச் சலிப்பின் அறிகுறிகள் கடுமையாதாக இருந்தாலும், அது கண்டறியமுடியாததாக, தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும்.

English

One of the mood disorders characterized by such symptoms as loss of interest in one's usual activities, irritability, poor appetite, sleeplessness or excessive sleeping, decreased sexual drive, fatigue, psychomotor agitation, feelings of hopelessness, inability to concentrate, and suicidal ideation. Major depression can be subdivided into two groups: the "single episode" (at least four symptoms present almost daily for more than two weeks) and the "recurrent episode" (the episodes come and go for intervals of at least two consecutive months). Someone with major depression may be distinguished from someone with a bipolar disorder by the fact that he or she has not had a manic episode. Major depression may be distinguished from dysthymic disorder in that its symptoms are more severe but occur in discrete episodes that can be distinguished from the person's usual functioning; in dysthymic disorders, the symptoms are almost continuous.