make-work

உருவாக்கப்பட்ட வேலைகள்

தமிழ் விளக்கம்

உற்பத்திசாராத, அத்தியாவசியப் பணிகளில் வேலை தேவைப்படுபவர்களுக்கு கூலியோ நலத்திட்ட உதவிகளோ கொடுத்து சில வேலைகளைச் செய்ய வைப்பது. பல அரசுத் திட்டங்கள் இப்படி உருவாக்கப்பட்ட வேலைகள்தாம். Civilian Conservation Corps (CCC) குடிமுறைப் பாதுகாப்புக் குழு (குடி மராமத்து) - குடிமுறைப் பாதுகாப்புத் தொண்டரணி (குடி மராமத்து) என்பது கூட ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினால் ஏராளமானோர் வேலைவாய்ப்பு இல்லாமலிருந்ததால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ளவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்டதுதான் குடிமுறைப் பாதுகாப்புத் தொண்டரணி (குடி மராமத்து தொண்டரணி). இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் / பாராமரிக்கும் பணியில் வேலைற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து, நாட்டின் இயற்கை ஆதாரங்களை முறையாகப் பேண வழிவகுத்தது. இந்தத் தொண்டரணி மூலமாகவே அமெரிக்காவின் மிகப் பெரிய தேசியப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, பாராமரிக்கப்பட்டு, இன்று நாட்டின் தேசிய அடையாளச் சின்னங்களாகி இருக்கின்றது.

English

Nonessential employment provided not to produce something but to give a needy person some activity that results in payment or benefit. Many government programs have been labeled (often inaccurately) as "made-work" or make-work programs, including the Civilian Conservation Corps (CCC), the Works Progress Administration (WPA), the Job Corps, and various workfare plans.