mal de ojo

மால் டி ஒஜோ, கண் திருஷ்டி, கண்ணேறு. கொடுங்கண், வண்கண், நச்சுக்கண், கொள்ளிக்கண், ராஜ திருஷ்டி, விஷக்கண், கண்ணூறு, கருங்கண், வெங்கண், சுடுகண்

தமிழ் விளக்கம்

கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண் திருஷ்டி என்று கூறுவா். திருஷ்டியால் பாதிப்பு எற்படும் என்ற நம்பிக்கை, பல நாட்டு மக்களிடம் இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலேயா்கள், குதிரை லாடத்தைத் தலைகீழாக வாசல் நிலைப்படியின் மேற்பகுதியில் அடித்து வைக்கிற பழக்கம் இன்றும் உண்டு. அரபு நாடுகளில் வீட்டின் தலை வாசலில், சிறிய வெங்காயத்தைத் துணியில் முடிந்து தொங்க விடுகின்றனா். கண்ணேறு பொம்மை என்பது சில தமிழர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொங்கவிடப்படும் ஒரு வகைப் பொம்மை அல்லது பொம்மைத் தலை ஆகும். பார்ப்பதற்கு அசுரர்கள் போல் இருக்கும் இவை அந்த இடங்களைக் கண்ணூறில் இருந்து அல்லது தீய சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று சிலரால் நம்பப்படுகிறது. பிற இனத்தவர்கள் மத்தியிலும் இவ்வாறான பொம்மைகள் தொங்கவிடப்படும் வழக்கம் உள்ளது.

English

Spanish for "evil eye," a culture-bound syndrome in which the individual, most often a child, experiences fitful sleep, diarrhea, vomiting, fever, and crying without apparent cause.