maladaptive
இணக்கமற்ற, இசைவற்ற (நடத்தை), விலகியிருத்தல்
தமிழ் விளக்கம்
சமூக எதிர்பார்ப்புகளையோ, சொந்த விருப்பங்களையோ நிறைவேற்றிக்கொள்ள முடியாத அளவிற்கு இணக்கமற்ற தன்மை அல்லது நடத்தை. எடுத்துக்காட்டாக, ஒரு சூழலிலிருந்து ஒதுங்கியிருப்பதென்பது, அந்தச் சூழல் தரும் நம்பத்தகாத அச்ச உணர்விலிருந்து விலகியிருக்கச் செய்து மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவுமென்றாலும், அந்தச் சூழலின் உண்மையைப் புரிந்துகொண்டு, அதைக் கையாளும் திறனை அளிக்காது. விலகிருத்தல் என்பது காலப்போக்கில் மனிதர்களைச் செயழிலக்கச் செய்துவிடும் மனக்கோளாறுக்கு இட்டுச் செல்லும். சில நேரங்களில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக விலகியிருத்தலென்பது நியாயமான நடத்தையாகவே கருதப்படுகிறது.
English
Pertaining to behaviors or characteristics that prevent people from meeting the demands of the environment or achieving personal goals.