male erectile disorder
ஆண்குறி விறைப்பாக முடியா கோளாறு, ஆண்குறி ஓங்கல் பிசகு .
தமிழ் விளக்கம்
உடலுறவின் போது சிலநேரங்களில் விறைப்புத் தன்மை ஏற்படாதிருப்பது இயல்பென்றாலும், அதுவே அடிக்கடி ஏற்படுகிறதென்றால் விறைப்புத் தன்மையில் கோளாறு உள்ளதாக அர்த்தம். இந்தக் கோளாறு சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கலாம். எப்போதாவது என்றால் அது சிறியது. உடல் உறவில் ஈடுபடும் போதெல்லாம் விறைப்புத் தன்மை ஏற்படவில்லையென்றால் அது தீவிரமான கோளாறு. அவர்களால் தாம்பத்ய உறவில் முழுமையாகத் திருப்தியுடன் ஈடுபட முடியாது. விறைப்புத் தன்மை கோளாறு வயதானவர்களுக்கு ஏற்படுவது சகஜம். 65 வயதில் 50 சதவீதம் பேருக்கும், 80 வயதில் 75 சதவீதம் பேருக்கும் விறைப்புத் தன்மையில் கோளாறு இருக்கும். விறைப்புத் தன்மை ஏற்படுவதற்கு ஆணுறுப்பில் போதுமான அளவு ரத்த ஓட்டம் தேவை. சர்க்கரை நோய், ரத்தம் உறைதல், ரத்த நாளங்களில் அறுவை சிகிச்சை செய்திருத்தல் போன்ற காரணங்களால் ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் போதுமான அளவு கிடைக்காமலிருந்தால் இக்கோளாறு தோன்றும். ப்ரோஸ்டேட் அறுவை சிகிச்சை போன்றவற்றால் நரம்பு சேதமடைந்திருந்தாலும் ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படாது. நரம்புக் கோளாறுகள், முதுகு எலும்பு நோய், ஸ்ட்ரோக், ஆல்கஹால், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைவு, சக்தி குறைவு, சோர்வு போன்றவையும் விறைப்பு ஏற்படாமல் போவதற்கு காரணங்கள். நிறைய மருந்துகளும் ஆணுறுப்பு விறைப்பு அடையாமல் போவதற்குக் காரணம். குறிப்பாக, வயதானவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகம். ஆன்டிஹைப்பர்டென்சிவ் (antihypertensives), ஆன்டிடிப்ரஸ்ஸன்ட்ஸ் (antidepressants), செடடிவ்ஸ் (sedatives), சிமெடிடைன் (cimetidine), டைகோக்ஸின் (digoxin), லித்தியம் (lithium), ஆன்டிசைக்கோடிக்ஸ் (antipsychotics) போன்ற மருந்துகள் ஆணுறுப்பு விறைப்பின்மைக்குக் காரணமாக உள்ளன. மன அழுத்தம், உடலுறவில் சரியாகச் செயல்படாமல் போய்விடுவோமோ என்ற கவலை, பயம், குற்ற உணர்வு, செக்ஸ் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் ஆகியவையும் விறைப்புத்தன்மைக் கோளாறுக்கான உளவியல் காரணங்களாக சொல்லப்படுகிறது. இவற்றுக்கு உதாரணமாக இளம் வயதினருக்கு உள்ள மன அழுத்தமிக்க சூழ்நிலை, தம்பதிகளிடையே புரிதலின்மை, வேலையில் பிரச்னை ஆகியவனவும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
English
A sexual disorder in which a man experiences a persistent or recurrent inability to achieve or maintain penis rigidity (tumescence) sufficient for completion of sexual intercourse, causing marked distress or interpersonal difficulty. By definition this disorder is not the result of a general medical condition or substance abuse. When using this term as a diagnosis, sexual therapists and other clinicians specify whether the condition is lifelong or acquired, generalized or situational, and due to psychological or combined factors. See also female sexual arousal disorder.