malingering

செயற்கையாக நோய்க்குறிகள் வெளிப்படுத்தும் சீர்கேடு, போலி நோய்க்குறிகள், மனநோய் இருப்பது போல பாசாங்கு செய்தல்

தமிழ் விளக்கம்

நோய் வந்தமாதிரி பாசாங்கு செய்வது, மயக்கமடைவது, நோய்க்குறிகளை மிகைப்படுத்திச் சொல்வது போன்ற கோளாறுகள். இந்தக் கோளாறுள்ளவர்கள், தங்கள் சிறுநீர் மாதிரிகளை நச்சுப்பொருள்களால் மாசுபடுத்துவது, மயக்கமருந்தை உட்கொண்டு மயக்கம் கொள்வது, தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஊசிமூலம் உட்செலுத்திக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு நோய் உள்ளது என்பதைச் செயற்கையாக நிரூபிக்க முயல்வர். அதிகக் கவனம் பெறவேண்டியோ, சலுகைகளை, பச்சாதாபத்தை எதிர்பார்த்தோ, தன் மீதுள்ள கடுமையைக் குறைக்கவேண்டியோ தனக்கு நோய்க்குறிகள் இருப்பது மாதிரியோ அல்லது தன் பாராமரிப்பிலுள்ளவர்களுக்கு நோய்க்குறி இருப்பது மாதிரியோ பாசாங்கு செய்யலாம். சிலர் சலுகைகளை மட்டும் எதிர்பாத்து, சமூகநலத் திட்டங்களைபெற, கட்டாய இராணுவ சேவையிலிருந்து விடுபட நோயுற்ற மாதிரி பாசாங்கு செய்வதை malingering என்று சொல்வர்

English

The act of feigning disability or illness, usually to avoid some undesired obligations or to achieve some real or imagined personal benefit (secondary gain). See also factitious disorder.