malnutrition
சத்துக் குறை உணவு, போதா ஊட்டம், ஊட்டக்குறை
தமிழ் விளக்கம்
ஊட்டச்சத்துக் குறைபாடு (Malnutrition) என்பது சமநிலையற்ற உணவு (சில ஊட்டச்சத்துக்களைப் பற்றாக் குறையுடனோ, அளவுக்கு அதிகமாகவோ, தவறான விகிதாச்சாரத்திலோ) உட்கொள்ளுவதால் ஏற்படும் நிலைமையைக் குறிக்கிறது. இது பொருத்தமற்ற, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவினால் ஏற்படும் மருத்துவவியல் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக குறைந்த உணவு உட்கொள்ளுதலினாலும், செரிமானக் குறைவாலும், அளவுக்கதிகமாக (வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால்) ஊட்டம் இழத்தலாலும் ஏற்படும் ஊட்டக் குறைவைக் குறித்தாலும், இது கூடுதலாக உணவு உண்பதாலும், குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்களை அளவு மீறி உட்கொள்வதாலும் ஏற்படக்கூடிய மிகையூட்டத்தையும் உள்ளடக்குகிறது. ஊட்டக்குறையானது தவறான அல்லது தேவைக்குக் குறைந்த உணவுகளை உட்கொள்ளுவதால் நிகழும் ஒரு மருத்துவ நிலையாகும். ஊட்டச் சத்துக்குறையானது (malnutrition) ஊட்டக்குறை (undernutrition), உடற் பருமன், எடை கூடுதலாக இருத்தல், நுண்ணூட்டக்குறைபாடு ஆகிய நோய்ப் பிரிவுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. என்றாலும், போதுமான கலோரிகள் உள்ள உணவைச் சாப்பிடாமல் இருப்பதால் அல்லது எந்தவொரு காரணத்தினாலோ குறிப்பிட்ட உணவுப்பொருட்களைத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் விளையும் ஊட்டக் குறைபாட்டைக் குறிக்கவே இது அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் நீண்டகாலத்துக்கு உடல்நலத்துக்குத் தேவையான அளவிலும், தரத்திலும் உள்ள ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளத் தவறினாலும் ஊட்டக்குறை ஏற்படும். நீண்டகால ஊட்டக்குறை தொற்றுநோய்களையும், வேறு சில நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது. உலகின் பொதுநலத்திற்கு மிக பெரிய சவாலாக ஊட்டச்சத்தின்மை உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
English
A physical condition, usually but not necessarily evidenced by emaciation, due to an insufficiency of needed food elements. Primary malnutrition is caused by a deficiency in the quantity or quality of foods containing such essentials as protein, vitamins, and minerals. This may result from an overall scarcity of food, from the individual's economic inability to purchase food, or from poor eating habits. Secondary malnutrition is caused by the body's inability to use or absorb certain nutrients, as sometimes happens in diseases of the pancreas, liver, thyroid, kidneys, and gastrointestinal system. Some of the diseases of malnutrition are rickets, scurvy, beriberi, pellagra, kwashiorkor, and some forms of anemia.