malpractice
முறைகேடு, ஒழுக்கங் கெட்ட பழக்கம, ஒழுங்கிலாச் செயல், ஒழுங்கீனச் செயல், தீங்கிழைக்கும் மருத்துவம், தவறான மருத்துவ சிகிச்சை, கெடுசெயல், பொறுப்புக்கேடான பதவிச் சரண்டல், முறைகேடான செயல், தகாத செயல்
தமிழ் விளக்கம்
பொதுவாக முறையற்ற, தகாத செயல் என்று அர்த்தம் கொள்ளப்பட்டாலும், நிபுணத்துவமுடைய செயல்களில் தொழில் நெறிமுறைகளுக்குப் புறம்பாகவும், எதிர்பார்க்கப்படும் தரத்துடன் சேவையைத் தராமல், வாடிக்கையாளர்களுக்கு தீங்கேற்படும் மாதிரி, செய்யக்கூடாத செயல்களைச் செய்வதும், அலட்சியமாகச் செய்வதுமே முறைகேடாகப் பெரும்பாலும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த மாதிரியான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு மருத்துவர்களும், சமூகப்பணியாளர்களும் ஆளாவதுண்டு. வாடிக்கையாளர்களின் வாக்குமூலங்களை தேவையற்று பகிர்ந்துகொள்ளல், தேவையற்று சிகிச்சைக் காலத்தை நீட்டித்தல், தேவையான சிகிச்சை அளிக்காமல் தொடர்பறுத்துக் கொள்ளல், தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரியான பாவனை செய்தல், முறையான மருத்துவ சிகிச்சைக்குப் பரிந்துரைக்காமல், தனக்குத் தெரிந்த மாற்றுச் சிகிச்சைகளைக் கையாளுதல், வாடிக்கையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தூண்டுமளவு அவதூறான செய்திகளை வெளியிடல், வாடிக்கையாளருடன் பாலுறவு கொள்ளல், வாடிக்கையாளருக்கு காயமேற்படும்படி சில சிகிச்சை முறைகளைக் கையாளுதல் போன்றவை சமூகப்பணியைப் பொருத்தமட்டில், சமூகப்பணியாளர்களைப் பொருத்தமட்டில் முறைகேடான செயல்களாகக் கருதப்படுகின்றன.
English
Willful or negligent behavior by a professional person that violates the relevant code of ethics and professional standards of care that proves harmful to the client. Among a social worker's actions most likely to result in malpractice are inappropriate divulging of confidential information, unnecessarily prolonged services, improper termination of needed services, misrepresentation of one's knowledge or skills, providing social work treatment as a replacement for needed medical treatment, providing information to others that is libelous or that results in improper incarceration, financial exploitation of the client, sexual activity with a client, and physical injury to the client that may occur in the course of certain treatments (such as group encounters).