malpractice insurance

முறைகேடுக் காப்பீடு

தமிழ் விளக்கம்

ஒரு நிபுணர் அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளுக்காகவும், தனக்கு நிபுணரால் தீங்கிழைக்கப்பட்டது என்று குற்றச்சாட்டிற்கு உள்ளாகி ஆதானால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யுமாக காப்பீடு செய்து கொள்வதுதான் முறைகேடுக் காப்பீடு.
தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் தொழில்முறைக் காப்பீட்டுத் திட்டம் சமூகப்பணியாளர்களுக்கு இத்தகைய காப்பீடு வழங்குகிறது. சமூகப்பணியென்பது பிறரின் நன்மையை விழைகின்ற, மரியாதைக்குரிய தொழில் என்றாலும், தாங்கள் எதிர்பார்த்த பயன்கள் / விளைவுகள் சமூகப்பணியாளரின் தொடர்பினால் / சேவையினால் கிடைக்கவில்லையென்று அதிருப்தியுறும் வாடிக்கையாளர்கள் தங்களின் அதிருப்தியை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்துவர். சில வாடிக்கையாளர்கள் சமூகப் பணியாளரின் தொழில் திறமையின்மையையோ, சமூகப்பணியாளர் தவறாக வழிகாட்டியதால் தன்னுடைய பிரச்சனைகள் மேலும் அதிகமாகியதாகவோ, சமூகப்பணியாளரால் தான் ஏமாற்றப்பட்டதாகவோ வழக்குத் தொடுக்கலாம். இந்த வழக்குகள் உண்மையானதாகவோ அல்லது புரியாமையின் விளைவாகக் கூட இருக்கலாம். சமூகப்பணியாளர்கள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் போதோ, அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் போதோ, சமூகப்பணியாளர் பலவித சிரமங்களுக்கு உள்ளாவார். இந்தச் சிரமங்களை எதிர்கொள்ள தொழில் முறைப் பாதுகாப்பு தேவைப்படும். இந்தப் பாதுகாப்பை, தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் தொழிமுறைக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. இந்தக் காப்புறுதி திட்டத்தில் சந்தாதாரராகும் சமூகப் பணியாளரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதிடவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இழப்பீடு தர வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த இழப்பீடை வழங்கவும், இந்த காப்பீட்டுத் திட்டம் வழிவகை செய்வதால் சமூகப்பணியாளர் சில இழப்புகளிலிருந்து மீள முடியும்.

English

An indemnification agreement in which a financial organization protects a professional from specified economic losses due to malpractice or accusations of malpractice. Usually the insurer agrees to reimburse the practitioner who is legally compelled to pay for harm done to the client up to a predetermined amount. In most coverages the insurer also helps cover costs of a legal defense. See also Insurance Trust, NASW.