man in the house rule
வீட்டிலிருக்கும் ஆண்துணை
தமிழ் விளக்கம்
தனித்திருக்கும் தாய்மார்கள் திருமணமாகாத அல்லது திருமணமான ஆண்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலோ அல்லது தொடர்பு வைத்திருந்தாலோ அந்த ஆணின் மூலமாக அந்தக் குடுமபத்திற்கும், அக்குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கும் ஆதரவு கிடைக்கும் என்ற அனுமானத்தில், ஆண் துணையுடனிருக்கும் தாய்மார்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் நலஉதவிகள் தேவை இல்லை என்ற அமெரிக்காவீன் சில மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை. இந்த நடைமுறை தவறென்று சுட்டிக்காட்டப்பட்டதால் இது விலக்கிக் கொள்ளப்பட்டது.
English
A provision, once common in many state welfare departments, in which the presence of a man, whether or not related to the family, was considered sufficient evidence that financial dependency did not exist, leading to curtailment of public assistance eligibility. Most states ended the practice in the 1960s through legislation and court rulings.