managed care
பராமரிப்பைக் கையாளுதல்
தமிழ் விளக்கம்
பராமரிப்பைக் கையாளுதல் என்பது நிர்வாகம் தொடர்பான சொல்லாடலாகப் பொருள் தந்தாலும், அமெரிக்காவைப் பொறுத்த அளவில் மருத்துவ வசதி தொடர்பான நிர்வாகத்தையும், தொழில்நுட்பத்தையும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தவிர்த்த பிற ஆரோக்கிய பராமரிப்பு அமைப்புகளின் பங்கேற்பைக் குறிக்கும் சொல்லாடலைக் குறிக்கும். இது சிகிச்சை முறைகளில் மருத்துவர், நோயாளி தவிர்த்த மூன்றாம் தரப்பினர் பங்கேற்று மருத்துவ வசதிகளைச் செய்து தரும் நடைமுறை. இந்த நடைமுறையில் நோயாறிதல் தொடங்கி, சிகிச்சையளிக்கப்டும் விதம், பயனாளிகள் முறைகேடாகப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, மருத்துவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்காதவாறு கண்காணித்தல், ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தில் மருத்துவ சேவைகளைத் தருவது போன்ற பல விசயங்களை உள்ளடங்கியுள்ளது. தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக அமெரிக்க நிறுவனங்கள், மருத்துவக் காப்பீடு தவிர்த்த மாற்று முறைகளைக் கையாண்டு, மருத்துவ செலவினங்களைக் குறைக்கவும், அதே நேரத்தில் மருத்துவ வசதி செய்துதரும் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவாதமான நிதி (வருமானமீட்டல்) கிடைக்கவும் இது வழிசெய்கிறது. இந்த நடைமுறையின்படியும், அமெரிக்க நாட்டின் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பு சட்டத்தின் படியும், 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் மைய அரசு அங்கீகரித்த ஏதாவதொரு ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பைத் தேர்வு செய்து, அந்த அமைப்பு பிரேரபிக்கும் கட்டணத்தைச் செலுத்தும்போது, அவர்களிடம் அனுப்பப்படும் நோயாளிகளுக்கு சில வரையறைகளுக்குட்பட்டு விரிவான மருத்துவ (ஆரோக்கிய பாதுகாப்பு) சேவைகளை மருத்துவக்குழு வழங்கும். இது பொதுவான மருத்துவக்காப்பீட்டு திட்டங்களிலிருந்து வேறுபட்டது.
English
The participation of third parties (beyond physician and patient) in the delivery of health care services. The term refers to a variety of procedures for monitoring the delivery of health care and health care benefit plans offered by employers to control overuse of services and overcharging by professionals and to ensure that proposed health care is consistent with accepted standards. Monitoring is primarily done through peer review and utilization review, although for social workers the monitoring is sometimes conducted by physicians.