managed care organizations (MCOs)
(மருத்துவ) சேவைகளுக்கான நிறுவனங்கள்
தமிழ் விளக்கம்
அமெரிக்க நாட்டின் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பு சட்டத்தின்படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் மைய அரசு அங்கீகரித்த ஏதாவதொரு ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பைத் தேர்வு செய்து, அந்த அமைப்பின் மூலமாகத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சேவைகள் தரப்பட வேண்டுமென்று விரும்புகிறார்களோ அதற்கேற்ப சேவைக்கட்டணம் செலுத்த, அதற்கேற்ப அந்த நிறுவனமும் நேரடியாகவோ அல்லது தங்களது தொடர்பிலிருக்கும் பிற நிறுவனங்கள் மூலமாகவோ, தனி நபர்கள் மூலமாகவோ வரையறுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கும். இதனால் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு நிறைவான மருத்துவப் பாதுகாப்பு அளிப்பதுடன், பணியாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளைத் திரும்பத் தரும் செலவினங்களிலிருந்து விடுதலை கிடைக்கின்றது. இப்படி நடத்தப்படும் ஆரோக்கியப் பராமரிப்பு நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் பெரும் மருத்துவ சேவைகளை விட விரிவான சேவைகளைச் செய்து தருகின்றன. மருத்துவக் காரணமில்லாத குடும்பம் மற்றும் தாம்பத்திய வாழ்வுப் பிரச்சனைகளுக்கும் ஆலோசனை சொல்வதும், நோய்த் தடுப்பு முயற்சிகளில் பயிற்சி போன்ற சேவைகளையும் செய்கிறது.
English
Regulated groups of health care professionals, administrators, and ancillary staff who provide for employers a full range of health care services for their employees. The MCO offers the services to the employer at negotiated rates directly or by subcontracting with networks of institutional and individual providers. Thus, employers avoid the costs and inconveniences of providing health care insurance for employees. MCOs often provide services beyond those traditionally covered through health insurance programs, including prevention programs and nonmedical concerns, such as marital and family problems.