managed health care program
மருத்துவப் பராமரிப்பை நிர்வகிக்கும் திட்டங்கள்
தமிழ் விளக்கம்
1.அரசின் நிதிப் பொறுப்புக்கு ஏற்ப உருவாகி நடத்தப்படும் மருத்துவ பராமரிப்பை குறிக்கும் சொல்லாடல். 2. அமெரிக்க நாட்டின் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பு சட்டத்தின்படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் மைய அரசு அங்கீகரித்த ஏதாவதொரு ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பைத் தேர்வு செய்து, அந்த அமைப்பின் மூலமாகத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சேவைகள் தரப்பட வேண்டுமென்று விரும்புகிறார்களோ அதற்கேற்ப சேவைக்கட்டணம் செலுத்த, அதற்கேற்ப அந்த நிறுவனமும் நேரடியாகவோ அல்லது தங்களது தொடர்பிலிருக்கும் பிற நிறுவனங்கள் மூலமாகவோ, தனி நபர்கள் மூலமாகவோ வரையறுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கும். இதில் தனிமனிதர்கள், நிறுவனங்கள் மட்டுமன்றி, குறிப்பிட்ட சில வியாதிகளுக்கான மருத்துவ சிகிச்சை, நீண்டகாலப் பராமரிப்பு என்று பலவிதமான சேவைகளை குறிப்பிட்ட அளவு கட்டுப்பணம் (premium) செலுத்தி சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மருத்துவப் பராமரிப்பை நிர்வகிக்கும் திட்டங்கள் என்று பொதுவாகச் சொல்லலாம்.
English
1. The systematic administration of health care delivery systems within the context of fiscal responsibility. 2. A formal network of health care personnel, third-party funding organizations, and other fiscal intermediaries who provide for virtually all the health and mental health care an individual or family might need in exchange for regular premium payments. Cost containment, effective marketing, and overseeing providers are emphasized in many of these programs. See also preferred provider organizations (PPOs) and health maintenance organization (HMO).