management by objectives (MBO)
குறிக்கோளுடைய நிர்வாகம், குறிக்கோள் மூலம் மேலாண்மை செய்தல்
தமிழ் விளக்கம்
ஒரு நிறுவனம் அடைய விரும்பும் குறிக்கோள்களைப் பற்றி அந்நிறுவனம் சார்ந்தவரிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தி, அதனடிப்படையில் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படவேண்டும், அதற்கான காலவரையறையென்ன என்பதைபற்றி முடிவு செய்து செயல்படும் நடைமுறையைக் குறிக்கோள் மூலம் மேலாண்மை செய்தல் எனப்படுகிறது. இந்த மேலாண்மை முறையில், என்னென்ன செயல்கள் செய்யப்படவிருக்கின்றது, அது எந்தச் செயல்திறனில் செய்யப்படவுள்ளது, அதற்கான நிதி மற்றும் பிற வசதிகள் எப்படி ஒதுக்கீடு செய்யப்படும், செயல்பாடுகள் ஏந்தமுறையில் கண்காணிக்கப்படும், தனி நபர்கள், குழுக்கள் மற்றும் மொத்த நிர்வாகமும் தீர்மானிக்கப்பட்ட குறிக்கோள்களை நோக்கி எந்த அளவு முன்னேறியிருக்கின்றது போன்றவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக சூழலை உருவாக்குவது இந்த மேலான்மையின் உள்ளடக்கமாகும்.
English
The administrative procedure in which an organization's members reach consensus about group results to be achieved, the resources to be devoted to each result, and the deadline for reaching objectives. Inherent in this managerial approach is a clear and accessible budget, specified performance criteria, managers to assess the criteria, and monitoring procedures that encourage individual group members to assess progress.