management tasks

மேலாண்மைப் பணிகள் / கடமைகள், முகாமைத்துவ கருமங்கள்

தமிழ் விளக்கம்

மேலாண்மைப் பணிகள் பற்றி பல்வேறு நிர்வாகவியல் வல்லுனர்கள் பட்டியலிட்டிருக்கின்றார்கள் ஹென்றி பயோல் Henri Fayol) என்ற அறிஞர், திட்டமிடல் (Planning), ஒழுங்கமைத்தல் (organizing), இயைபாக்கல் (Directing), கட்டுப்படுத்தல் (Controlling), ஊக்கப்படுத்தல் (motivation), நெறிப்படுத்தல் (directing), ஊழியரிடல் (staffing) போன்றவற்றை முகாமைத்துவ கருமங்களாகக் குறிக்கின்றார். லூத்தர் கல்லிக் மற்றும் லிண்டால் அர்விக் (Luther Gulick and Lyndall Urwick) ஆகியோர் POSDCORB (Planning, Organizing, Staffing, Directing, Coordinating, Reporting, Budgetting - திட்டமிடல், அமைப்பாக்கல், ஊழியரிடல் (பணியமர்த்துதல்) நெறிப்படுத்தல், ஒருங்கிணைத்தல், அறிக்கையிடல், பட்ஜெட் போன்ற பணிகளை மேலாண்மைப் பணிகளாகக் குறிக்கின்றனர். சமூகப்பணியில் சமூகப்பணி மேலாளர் செய்ய வேண்டிய ஆறு பணிகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. 1. ஒரு சேவைத் திட்டத்தை திட்டமிட்டு வடிவம் கொடுத்தல். 2. அந்த சேவை செய்வதற்கான நிதி மற்றும் பிற ஆதாரங்களைத் திரட்டுதல். 3. அமைப்பை உருவாக்கி அதன் செயல்முறைகளைத் திட்டமிடல், 4. பணியாளர்களின் திறனை வளர்த்து அதைத் தக்கவைத்தல், 5. செய்யப்படும் சேவைகளை மதிப்பீடு செய்தல் 6. தேவைக்கேற்றவாறு நிறுவன திட்டங்களையும் அணுகுமுறையும் மாற்றிக்கொள்ளல் போன்றவை சமூகப்பணி மேலாளரின் கடமைகளாகக் குறிக்கப்படுகின்றன.

English

The principal activities of a social welfare administrator or manager. The six basic management tasks are ( 1 ) planning and developing the program, (2) acquiring financial resources and support, (3) designing organizational structures and processes, (4) developing and maintaining staff capability, (5) assessing agency programs, and (6) changing agency programs.