mandamus
கீழ்மன்றத்திற்கு உயர் நீதிமன்றம் விடுக்கும் ஆணை, கடமைக் கட்டளை, ஆணைக்கட்டளை, மாண்டமஸ் ஆணை, செயலுறுத்தும் நீதிப் பேராணை, மேல்மன்ற ஆணை
தமிழ் விளக்கம்
சட்டபூர்வமான, நிர்வாகபூர்வமான நடவடிக்கைகள் எதனாலும் பயன் விளையாத போது, ஒரு செயலை அவரவர்கள் விருப்பத்திற்குச் செய்யவிடாமல் சட்டப்படி இப்படித்தான் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம், கீழ் நீதி மன்றங்களுக்கோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ இடும் அசாதாரணக் கட்டளை.
‘Written Order’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுதான் ரிட். ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம் முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம். அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’ ஒரு ஹை கோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள ஒரு கோர்ட் அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. உதாரணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ்பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷபணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந்தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம். மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லாமல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித்தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்யலாம். அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பதற்காகப் போடப்படுவது அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட். இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தச் சொல்லி உத்தரவிடும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டுமானாலும் போடலாம். ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்டமாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்.

English
A court order that requires the performance of an act.