mandatory community service
கட்டாயமாக்கப்பட்டத் தன்னார்வத் தொண்டு / சேவை / பணி
தமிழ் விளக்கம்
கட்டாயமாக்கப்பட்டத் தன்னார்வ சேவை பல நாடுகளில், பல வடிவங்களில் நடைமுறையிலிருக்கும் அணுகுமுறை. அரசுத் திட்டங்களுக்கான தகுதி பெறவோ, சில செயல்களிலிருந்து விலக்குப் பெறவோ, பள்ளி கல்லூரிகளில் கல்வித் தகுதியைப் பூர்த்தி செய்யவோ, குறிப்பிட்ட மணி நேரம் தன்னார்வ சேவை அல்லது சமுதாய சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நாடுகளில், அதற்கு மாற்றாகக் கொடுக்கப்படும் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டாய சமுதாய சேவை செய்யும் முறையும், சிறைத்தண்டனைக்கும், அபராத முறைக்கும் மாற்றாக நீதிமன்றத் தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலம் வரை ஒருவர் செய்யும் சமுதாய சேவையும், பள்ளி, கல்லூரிகளில் கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்ய கட்டாயமாக்கப்படும் சமுதாய சேவைப் பணிகளும் சமுதாய சேவை என்றே அழைக்கப்படுகின்றன. சமுதாயத்திற்கு சேவை செய்யுமாறு கொடுக்கப்படும் தண்டனை முறையில் ஒரு குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் குற்றவாளி, சிறைத்தண்டனைக்கு மாற்றாக அதற்கு இணையான காலம் சமுதாய சேவை செய்ய நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இம்மாதிரியான தீர்ப்பைப் பெற்றவர்கள், வீடற்றவர்களுக்கான முகாம்களில் உணவு பரிமாறுதல், பெற்றோர்களற்ற குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்லல், போதைப் பழக்கத்திற்கு எதிராகப் பள்ளிகளில் பிரச்சாரம், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவி என்று பல சேவைகள் செய்ய உத்தரவிடப்படுவார்கள். இந்தியாவில் கல்லூரி, பள்ளி மாணவர்கள், நாட்டு நலப்பணி, தேசிய மாணவர் படை போன்ற திட்டங்களில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது சமூகப்பணிக் கல்வியில், மாணவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கிராம முகாம்களில் கலந்து கொள்ளவேண்டும் என்பது பாடத்திட்டதிலே இணைக்கப்பட்ட கட்டாய நடைமுறை.
English
Also known as "compulsory volunteering," the requirement to perform some specified tasks or activity for the good of the public that is imposed on an individual through the pressure of legal authority or social acceptance. For example, a school may require its students, as a condition of graduating, to perform some community service as well as complete course work. Or a person convicted of breaking a law may be required to work in a soup kitchen for a specified time period as a condition of the judicial sentence or the out-of-court agreement.