mandatory retirement

கட்டாயமாக பணி ஓய்வு / பின்வாங்குதல் / படுக்கப்போதல், வேலையைவிட்டு விலகுதல்

தமிழ் விளக்கம்

பணி ஓய்வு (Retirement from Service) என்பது அரசால் வரையறுக்கப்பட்ட ஓய்வு பெரும் வயதை அடைந்ததும் அந்த ஊழியரை, அவர் செய்யும் பணியிலிருந்து பணி வழங்குபவர் முற்றிலுமாக விடுவிப்பதாகும். பணி ஓய்வு வயது வரம்பு நாட்டிற்கு நாடு, ஒரேநாட்டிலே பணிக்கு ஏற்றமாதிரி வித்தியாசப்படுகிறது. இந்தியாவின் நடுவண் அரசின் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. ஆனால் பலமாநிலங்களில் அரசுத் துறையில் பணிபுரிபவர் எனில் 58 வயது நிறைவடைந்ததும் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். எனினும் அடிப்படை பணிபுரிபவர் என்றால் 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெறவேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வயதடைந்து ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு, “வயது முதிர்வு ஓய்வு” (Retirement on Superannuation) எனப்படும். அமெரிக்க போன்ற நாடுகளில் வயதைக் காரணம் காட்டி கட்டாய ஓய்வு பெறுவது நடைமுறையில் இல்லை.

English

The requirement that employees who have reached a previously specified age relinquish their jobs. With passage of the Age Discrimination in Employment Act (ADEA) of 1967 and enforcement by the Equal Employment Opportunity Commission (EEOC), mandatory retirement is generally prohibited. However, ADEA has some exceptions: company executives older than 65, tenured university professors older than 70, and law enforcement officials older than the state age of retirement may be retired under certain circumstances.