manic-depressive illness
உன்மத்தமும் உளச்சோர்வும், கிளர்ச்சி தளர்ச்சி நோய், உணர்வுநிலை மாற்றங்களில் வரும் சீர்கேடு
தமிழ் விளக்கம்
தீவிரமான மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை வெளிப்படுத்திவிட்டு அதே வேகத்தில் கிளர்ச்சி, பரவசநிலை மற்றும் படபடப்பை வெளிப்படுத்துவது. இந்த நோயைப் பற்றிய சமீபகால மரபணு மற்றும் இரசாயன ஆய்வுகள் இந்த நோய் உடலியக்கத்தோடு தொடர்புள்ளதைக் காட்டுகிறது. இந்த நோயை உன்மத்தம், உளக்கிளர்ச்சி என்றழைப்பதை விட இருமனக் குழப்பச் சீர்கேடு என்ற பெயரிட்டு அழைக்கின்றார்கள்.
English
A disorder characterized by profound mood swings ranging from deep, prolonged depression to excited, euphoric, agitated behavior. Genetic and chemical studies are beginning to suggest an organic basis for this illness. The term has been replaced in the diagnostic nomenclature of mental health professionals by the label bipolar disorder.