Manning, Leah Hicks (1917-1979)

மானிங் லியா ஹிக்ஸ் (1917-1979)

தமிழ் விளக்கம்

மானிங் லியா ஹிக்ஸ் (1917-1979) - அமெரிக்க செவ்விந்திய மரபைச் சேர்ந்த லியா ஹிக்ஸ் மென்ங் உத்தா பல்கலைக் கழகத்தில் (University of Utah) 1968 ஆம் ஆண்டு அந்த ஆண்டின் சிறந்த சமூகப்பணி மாணவி என்ற சிறப்புடன் சமூகப்பணி பட்டம் பெற்றவர். சமூகப்பணியாளர்களிடையே, அமெரிக்க இந்தியர்களைப் பற்றிய புரிதலுக்கு வித்திட்டவர். பூர்வீக அமெரிக்கக் குடிகளுக்கான அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தான் பணியாற்றிய இந்திய விவகாரங்களுக்கான செயலகத்தின் மூலம், இந்தியக் குழந்தைகள் நலச் சட்டம் கொண்டுவரப் பாடுபட்டார். இந்தச் சட்டம் இந்தியக் குழந்தைகளை இந்தியக் குடும்பங்களிலிருந்து பிரித்து இந்தியரல்லாத பிறரால் தத்தெடுக்கப்படுவததற்கும், காப்பகங்களில் வளர்க்கப்படுவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.

English

After receiving her social work degrees, she helped establish Inter-Tribal Councils for Native American groups and in her position with the Bureau of Indian Affairs (BIA) helped establish the Indian Child Welfare Act (IC WA) of 1978 to keep Indian children on reservations with their families.