Manpower Development and Training Act of 1962

மனித ஆற்றல் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான சட்டம் 1962

தமிழ் விளக்கம்

அமெரிக்க மாநில அரசுகளின் வேலைவாய்ப்பகங்கள் மற்றும் தனியார் வேலை வாய்ப்பகங்கள் வேலை தேடுவோருக்கும், வேறு நல்ல வேலைகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கும் பணியிடைப் பயிற்சி அளித்து அவர்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ள பயிற்சி கொடுக்க மத்திய அரசின் நிதி உதவிக்கு வழிவகை செய்த சட்டம். இச் சட்டம் பின்னர் பொருளாதார வாய்ப்பிற்கான சட்டம் மற்றும் பணிசெய் படைகள் சட்டமாக (Economic Opportunity Act of 1964 and Job Corps) மாற்றம் பெற்றது.
பார்க்க: Job Corps - வேலைக் குழுக்கள், பணிசெய் படை - வசதி வாய்ப்புகளற்று பின்தங்கிய இளைஞர்களுக்கு, வேலைதிறன்கள் வளர்த்தல், உறைவிட வசதியோடு பயிற்சியளித்தல் மற்றும் வேலை வாய்ப்பளிப்பதற்காக அமெரிக்க அரசின் பொருளாதார வாய்ப்புச் சட்டம் 1964 (லின்டன் பி ஜான்சன்) வழி செய்தது. வேலையற்ற 16-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புப் பயிற்சியோ அல்லது இயற்கை வள பராமரிப்பு முகாம்களில் பணிசெய்ய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அமெரிக்க அரசின் தொழிலாளர் துறையால் நிர்வகிக்கப்பட்ட இத்திட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி அளிக்க வாய்ப்பு பெற்றனர். பொதுமக்கள் பராமரிப்புக் குழுக்கள் (Civilian Conservation Corps (CCC), புதிய ஒப்பந்தம் (New Deal programs) நடைமுறைக்கு வந்த பின்னர் இத்திட்டம் சில மாற்றங்களோடு தொடர்ந்தது.

English

The federal legislation (P.L. 87415) that funded state employment agencies and private enterprise for on-the-job training to help workers acquire needed employment skills. In 1973, these programs were incorporated into CETA. See also Economic Opportunity Act of 1964 and Job Corps.