manpower planning
மனிதவளத் திட்டமிடல்
தமிழ் விளக்கம்
மனிதவளமென்பது ஒரு நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தனி நபரின் திறனை ஊக்குவிப்பதன் மூலம் நிறுவனத்தின் தேவை, எதிர்பார்ப்புகளைத் திறம்படப் பூர்த்தி செய்ய மனிதவளத் திட்டமிடல் உதவுகிறது. நிறுவனங்களின் வினைத் திறனை (செயலாற்றும் திறனை) மேம்படுத்தும் முகமாக நிறுவனங்களின் அனைத்துப் பணியாளர்களின் திறமைகளைத் தரமுயர்த்துதல் மனிதவளத் திட்டமிடலின் சிறப்பாகும். சமூகப்பணியைப் பொருத்தமட்டில் மனிதவளத் திட்டமிடல் என்பது ஒரு சமூக நிறுவனத்தின் தேவைகளையும் நோக்கங்களையும் அறிந்து, அதற்கேற்ற செயல்பாடுகளை வரையறுத்து, அந்த செயல்களைச் செய்வதற்கான பணித்திறன்களை தீர்மானித்து, அதற்கேற்றார் போல பணியிடங்களையும், பதவி முறைகளையும் உருவாக்கி (career ladders), பணியாளர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் மனிதவளத் திட்டமிடுதலில் அடங்கும்.
English
The systematic process of defining the problems and personnel needs of a social organization such as a social agency, establishing a system of objectives relevant to those problems and needs, determining activities required to meet objectives, identifying and analyzing tasks, creating jobs and career ladders, and designing in-service training.