manslaughter

மனிதக்கொலை செய்தல், பகைமை எண்ணமற்ற ஆட்கொலை, ஆள்வதம், வன்மம், நோக்கம் இல்லாக் கொலை, நரஹத்தி

தமிழ் விளக்கம்

திட்டமிடாமலோ, பழிவாங்கும் நோக்கத்துடனில்லாமோ மனித உயிர் போவதற்கான செயலுக்குக் காரணமாயிருத்தல். இது சட்டப்படி குற்றமென்றாலும், பெரும்பாலான நாடுகளின் சட்டங்கள், மனமிசையாத ஆள்வதம், கைமோசக்கொலை (involuntary manslaughter) மற்றும் மனமிசைந்த ஆள்வதம் அல்லது திட்டமிட்ட கொலை (voluntary manslaughte) இரண்டையும் வேறுபடுத்தி, முன்னதற்கு குறைவான தண்டனையையே வழங்குகிறது. எடுத்துக்காட்டாக கவனக் குறைவாக மனித உயிர் போகுமளவு விபத்து ஏற்பத்தியதை manslaughter என்றும், திட்டமிட்டு, பழிவாங்கும் எண்ணத்தோடு வாகன விபத்தை ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டதென்றால், அது கொலைக்குற்றமாக கருதப்பட்டு அதற்குக் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

English

The unlawful, but unpremeditated, killing of another person. Laws in most jurisdictions distinguish between voluntary and involuntary manslaughter. The involuntary type refers to causing death through such criminally negligent acts as reckless driving. The voluntary type is an intentional homicide under mitigating but not justifiable circumstances, such as killing someone who has provoked uncontrollable rage or terror.