MAO inhibitors
மோனோமைன் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (MAOIs)
தமிழ் விளக்கம்
நம் உடலில் சுரக்கும் மோனோஅமின் ஆக்ஸிஜனேற்ற என்சைம் என்பது மனித மூளையில் சோர்வு தட்டாமல் இருக்க உதவும் வேறு சில என்சைம்களைப் பாதிப்பதால் மனிதர்கள் ஊக்கமிழந்து உற்சாகமிழக்கின்றார்கள். மோனோமைன் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள், மோனோஅமின் ஆக்ஸிஜனேற்ற என்சைமின் செயல்பாட்டைத் தடுத்து ஊக்கமிழக்காமல் பார்த்துக்கொள்கிறது. MAO தடுப்பான்கள், நோயாளிகளை மனச் சோர்விலிருந்து விடுவித்து, உளத்திறன் ஊக்குவிப்பான்களாகப் (anti deppressants) பயன்படுகிறது. MAO தடுப்பான்கள் உபயோகிக்க ஆரம்பித்த மூன்று வாரங்களில் உளச்சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கின்றது. உளத்திறன் ஊக்குவிப்பிகளில் MAO தடுப்பான்கள் (Marplan, Parnate, Prozac, மற்றும் Nardil என்ற வர்த்தகப் பெயரிலும்) இன்னொருவகையான Tricyclis (Elavil, Vivactil, Tofranil, Pertofrane, Sinequan போன்ற வர்த்தகப் பெயரிலும்) மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. பல நாள் உபயோகத்திற்குப் பின்னரே அது மருத்துவர்கள் சொன்ன பலனைக் கொடுக்கும்.
English
Psychotropic drugs prescribed by physicians primarily to relieve the symptoms of depression in certain patients. These drugs reduce the metabolism of monoamine oxidase (MAO) after it has been released into the synaptic space, which ultimately eases neural transmission. The process takes up to three weeks before depressive symptoms can be relieved. Some side effects include dry mouth, fatigue, and impotence in men. MAO inhibitors are one of the two important types of antidepressant medication, the other being the tricyclics (for example, Elavil, Tofranil, Vivactyl, or Sinequan). Trade names of MAO inhibitors include Marplan, Parnate, and Nardil.