marasmus

உடல் இளைப்பு, குழந்தை உடல் மெலிவு, குழந்தை முதலாமாண்டு புரதக் குறை நோய், தராத்தாடம், நோஞ்சான், உடல்கரைவு

தமிழ் விளக்கம்

புரதச்சத்துக் குறைவால் மராஸ்மஸ் (வளர்ச்சிக் குறைவு மற்றும் வளர்ச்சி இழப்பு ஏற்படுவது) மற்றும் குவாஷியாக்கர் (உடல் வீக்கம் ஏற்படுவது, திசுக்களில் பாதிப்பு ஏற்படுவது) ஆகிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. புரதச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் சராசரி உடல் வளர்ச்சியை விடக் வளர்ச்சி குன்றி காணப்படுவர். உடல்ரீதியாக சுறுசுறுப்பின்றி காணப்படுவார்கள். அதிக அளவில் தொற்று நோய்த்தாக்கம் மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாவார்கள். புரதச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வளர்ச்சி குன்றியும், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமலும், உலர்ந்த சருமத்துடனும், செந்நிற முடியுடனும் காணப்படுவர். உடல் சூடு, நாடித்துடிப்பு மற்றும் சுவாசம் போன்றவைகளும் குறைந்து காணப்படும். சோர்வு, பசியுணர்வு, வாந்தி மற்றும் மயக்கம் கூட ஏற்படலாம். புரதச்சத்துக் குறைவால், நிமோனியா, அம்மை போன்ற நோய்த்தாக்கத்தினால் இறப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
மாரஸ்மஸ் நோயின் அறிகுறிகள் பின்வருமாறு - கடுமையான வளர்ச்சிக் குறைவு, தோழின் கீழான பகுதியில் கொழுப்பு இழப்பு, கடுமையான தோல் சேதாரம், குழந்தைகள், ஒல்லியான உடல் வாகு, சுருங்கிய தோல் மற்றும் புடைத்த எலும்புகள் கொண்டதாகத் தோன்றும்.

English

A gradual deterioration and emaciation found in some infants and young children, particularly those who are cared for in institutional settings. Often, the child appears to have the symptoms of malnutrition. Many investigators believe marasmus is sometimes caused by a child's not being touched, held, fondled, and parented.