March of Dimes

வெள்ளி நாணயங்களுடன் அணிவகுத்து வாரீர், நிதி மிகுந்தவர் வெள்ளிக் காசுகள் தாரீர்

தமிழ் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதியான பிராங்க்லின் ரூஸ்வெல்ட் அவர்களால், 1938 ஆம் ஆண்டு இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க தேசிய இளம்பிள்ளைவாதத் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. போலியோவை ஒழிக்க அமெரிக்காவின் குழந்தைகள், 10 சென்ட் வெள்ளி நாணயத்தை நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இளம்பிள்ளை வாதத் தடுப்பூசிகளால் போலியோ ஒழிந்த பிறகு, இந்த அமைப்பின் குறிக்கோள் குழந்தைகளையும் தாய்மார்களையும் மையப்படுத்தி விரிவடைந்தது. தாய்மார்களுக்கு ஏற்படும் கர்ப்பகாலக் குறைபாடுகள், குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகளைத் தவிர்த்தல், குறைப்பிரசவ மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் நலன் என்று விரிவடைந்தது. இது இலாபநோக்கற்ற தொண்டு நிறுவனமாதலால், நிதி திரட்டும் பொருட்டு அமெரிக்க மக்கள் வெள்ளி நாணயங்களுடன் அணிவகுத்துவர கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். நிதி குறைந்தவர் வழங்கும் காசுகளாலே இந்நிறுவனம் செயல்படுகிறது.

English

The health organization established in 1938 by President Franklin D. Roosevelt as the National Foundation for Infantile Paralysis. The early fundraising was to appeal to children and their families by having them contribute 10 cents or more toward the eradication of polio. With the development of the Salk and Sabin vaccines, polio was virtually eliminated (however, it has reappeared in several countries), and the organization turned its attention to the prevention of birth defects, maternity problems, and neonatal care. The organization, now known as the "March of Dimes Mother's March," maintains a resource center to provide information on pregnancy, birth defects, and genetic and environmental risk factors. A health information specialist who is prepared to answer specific questions can be reached by a toll-free call to 1-888-663-4637.