Marfan's syndrome

மார்ஃபன் நோய்க்கூறு

தமிழ் விளக்கம்

மார்பன் என்ற குழந்தை மருத்துவரால் முதலில் அடையாளம் காணப்பட்டதால் இந்நோய்க்கு இப்பெயரிடப்பட்டது. இது இணைப்புத் திசுக்களில் தோன்றும் மரபணு சார்ந்த நோய். இந்த நோய் உடலின் எந்தப் பாகத்தையும் பாதிக்கலாம். இதய வால்வுகள், கண்கள், முதுக்குத்தண்டு, இடையண்ணம் போன்ற பகுதிகளைப் பாதிக்கும். இந்த நோயுள்ளவர்கள் வழக்கத்திற்கு மாறான உயரம், நீண்ட கால்கள், மெல்லிய விரல்கள் போன்றவற்றைப் பெற்றிருப்பர்.

English

A hereditary congenital disorder of connective tissue characterized by abnormally long and slender limbs.