marginalized groups

விளிம்பு நிலைக் குழுக்கள், ஓரத்தில் இருப்பவர்கள், மையத்தில் இல்லாது விளிம்பில் இருப்பவர்கள், பயன்படுத்துதற்கரிதானவர்கள்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட சமூகப் பொருளாதார நிலையைச் சார்ந்ததினாலோ, அல்லது குறிப்பிட்ட வயதுக் குழுவை, பாலினத்தை, தொழிலாளர் அமைப்பை, அரசியல் இயக்கத்தை, மதத்தை, இனத்தைச் சார்ந்ததினாலோ அதிகாரமாற்றுப் போனவர்கள். இவர்கள் மையத்திலிருந்து விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு, பெரும்பான்மைச் சமூகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு, அவர்களுடைய தேவைகள் மற்றும் விருப்பங்கள் புறக்கணிக்கப்படும் சமூக நிகழ்வு, எ.கா. ஆதிவாசிகள், ஒருசில தலித் வகுப்பினர், உடல் ஊனமுற்றோர், பாலினச் சிறுபான்மையினர், மன நோயாளிகள்.

English

Relatively powerless people who, because they belong to a certain socioeconomic class, age cohort, labor organization, political affiliation, gender, racial or ethnic group, or religious group, are seen as being of little importance by the dominant cultural group.