Mariel boatlift
மரியல் படகேற்றம்
தமிழ் விளக்கம்
1980 களில் கியூபாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையில், கியூபாவிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம் என்ற கியூபா நாட்டு அரசாங்கம் அனுமதித்ததன் பேரில், பிடல் காஸ்ட்ரோவை எதிர்த்த கியூபா அமெரிக்கர்கள், கியூபாவின் மரியல் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவிற்குக் கப்பலேறி பெருவாரியாகப் புலம்பெயர்ந்தார்கள். ஏறக்குறைய ஆறுமாத காலம் 1,30,000 பேர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து தஞ்சமடைந்தார்கள். கியூபா அமெரிக்கர்களோடு, பல்வேறு காரணங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டிருந்த 20000 குற்றவாளிகள் மற்றும் மனநோயாளிகளை கியூபா அரசாங்கம் இவர்களோடு சேர்த்து அனுப்பியது. இப்புலம் பெயர்ந்தவர்களால் அமெரிக்காவின் சுகாதாரத் துறை, நீதித்துறை மற்றும் சமூகப்பாதுகாப்பு துறை அதிக சுமைகளை ஏற்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியது.
English
The rapid influx of Cuban refugees into the United States during a six-month period ending in September 1980. Over 130,000 Cubans, mostly antiCastro relatives of Cuban Americans, debarked from the Cuban port at Mariel Bay. Cuban leader Fidel Castro also placed 20,000 people convicted of crimes and patients of mental institutions on the boatlift, which placed a burden on U.S. health, justice, and social services organizations. Immigrants to the United States from this group are known as "Marielistas."