marital contracts
திருமண ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
திருமண ஒப்பந்தம் என்பது மணம் புரிந்துகொள்ளும் தம்பதியினரின் பரஸ்பர எதிர்பார்ப்புகளைக் குறிப்பது என்ற பொருளில்தான் குடும்பச் சிகிச்சையாளர்கள் பயன்படுத்துகின்றனர். 1. இந்த எதிர்பார்ப்புகள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவோ அல்லது தம்பதியினர் தங்கள் மனதிற்குள் வைத்துக் கொண்டதாகவோ இருக்கலாம். ஆரோக்கியமான குடும்ப வாழ்வில் தங்கள் எதிர்பார்ப்புகளைப் பரஸ்பரம் தெரிவித்து, அதை அடையும் அல்லது நிறைவேற்றும் சாத்தியக்கூறுகள் பற்றி தம்பதியினரிடையே புரிதல் ஏற்படவேண்டும். எதிர்பார்ப்புகள் பகிர்ந்து கொள்ளப்படாதபோது, அது நிறைவேறாத பட்சத்தில், மணவாழ்வில் ஏமாற்றங்களும் அதையொட்டி குழப்பமும் சந்தேகமும் ஏற்படும். 2. அதற்கு மாறாக எதிர்பார்ப்புகளை, பரஸ்பரக் கடமைகள் மற்றும் பொருளாதாரப் பகிர்வு போன்றவற்றை எழுத்துபூர்வமாக சட்டப்படி செல்லத்தக்க ஒப்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சம், மணவாழ்வில் மனக்கசப்புகளையும் ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம் என்பது குடும்ப ஆலோசகர்களின் அனுபவம்.
English
1. The term used by family therapists to indicate the expectations and motives that each partner brings to the marriage. These expectations and motives may be conscious or unconscious in the person who holds them and may or may not be known to the partner. In healthy marriages, each person's contracts become known to both, and agreements are reached so that the husband's and wife's individual contracts become jointly shared. In those marriages in which the contracts remain concealed and separate, the couple is prone to confusion, suspicion, and disappointment with one another. 2. The term is also used to indicate formal, written, and legally enforced agreements made between marrying couples, usually to specify the financial terms and obligations each partner is to assume. See also prenuptial agreement and postnuptial agreement.