marital therapy

திருமணச் சிகிச்சை / குடும்பச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

ஒரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்களிடையுள்ள பரஸ்பரத் தொடர்பாடலையும், உறவாடலையும் மேம்படுத்த, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு வடிவமைக்கப்பட்ட உளவியல் சிகிச்சை முறை. இது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் தொடர்புகளைப் பரிசீலித்து, பரஸ்பர மற்றும் ஏற்றெதிர் (reciprocal obligations) கடமைகளை விளக்கி, குடும்ப உறுப்பினர்களுக்குள் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க (நிலைமைக்குத் தக்கபடி வேறுபடுத்திக் கொள்ளக்கூடிய), நடத்தைப் போக்குகளை ஊக்குவிக்கின்றது. பிரச்சனைக்கான பின்னணிக் காரணத்தை (குடும்ப வரலாறு) முழுக்கச் சார்ந்திராமல், உறுப்பினர்கள் சொன்னதையும், சொல்லாமல் விட்டதையும், சொல்லாமல் மறைத்தையும் கவனத்துடன் ஆராய்ந்து, 'இங்கே இப்பொழுது' என்ன தேவைப்படுகிறது என்பதையறிந்து செய்யப்படும் சிகிச்சை. சமூகஉளவியல், நடத்தையியல், அமைப்பியல் கண்ணோட்டங்களின்படி சிகிச்சை முறைகளும் வேறுபடுகின்றன. சில செல்வாக்குமிக்க குடும்பச் சிகிச்சையாளர்கள் சால்வடார் மினிசின் (கட்டமைப்புக் குடும்ப சிகிச்சை), ஜே ஹேலி (மூலோபாய குடும்பச் சிகிச்சை), வர்ஜினியா சதிர் மற்றும் பாலோ ஆல்டோ குழு, முர்ரே போவன், கார்ல் விட்டேகர், ஹென்றி டிக்ஸ், மாரா செல்விணி, மற்றும் பெக்கி பாப் போன்றவர்கள்.
பார்க்க: Conjoint Therapy - ஒருங்கிணைந்த சிகிச்சை - கணவன் மனைவியையோ, குழந்தைகள் பெற்றோர்களையோ, காதலர்களையோ ஒரே அமர்வில் கலந்துகொள்ளச் செய்து சிகிச்சையாளரோ, சிகிச்சையாளர் குழுவோ அவர்களை ஒருசேரச் சந்தித்து சிகிச்சை அளிப்பது.
பார்க்க: concurrent therapy - ஒரே நேரத்தில் இரண்டு மூன்று நிபுணர்களால் சிகிச்சையளிக்கப்படுதல் - இந்த சிகிச்சை முறையில் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சமூகப்பணியாளரோ அல்லது பிற நிபுணர்களோ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை, (தம்பதியினரோ, பிற குடும்ப உறுப்பினரோ) நேருக்கு நேராக சந்தித்து உரையாட விருப்பமில்லாதிருந்தால் தனித்தனியான அமர்வுகளில் சந்தித்து உரையாடி, பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு சிகிச்சையளிக்கும் முறை.
collaborative therapy - கூட்டாகச் சிகிச்சை அளித்தல் - கூட்டுச் சிகிச்சை முறை என்பது ஒரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப பலதிறப் பயிற்சியுடைய நிபுணர்களால் கையாளப்படும் சிகிச்சை முறையாகும். இதில் வாடிக்கையாளர்களும் சிகிச்சை அளிப்பதில் பங்கு பெறுவார்கள். வாடிக்கையாளர்களுடன் சிகிச்சை முறைகள் பற்றி கலந்தாலோசித்தும், சிகிச்சையாளர்கள் கண்டறிந்த நோய்க்குறிகள், அவர்களின் பிற குறிப்புகள் நோயாளிகளுக்கு புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லப்படும். இந்தக் கூட்டுச் சிகிச்சை முறை பெரும்பாலும் பாலின அடையாளக் குறைபாடு உள்ளவர்கள், திருநங்கைகள், மாற்று வாழ்க்கையைக் தேர்வு செய்தவர்கள், எதிர்பாலின இச்சைகள்தாம் இயல்பானதென்று கருதாதவர்கள், ஒரு துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ள அறிவாளிகள் போன்றவர்களுக்கு அளிக்கப்படுகின்றது
couples group therapy - தம்பதிகளுக்கான குழு சிகிச்சை - குடும்ப மற்றும் தாம்பத்திய வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பல தம்பதியினரை ஒரே நேரத்தில் தொடர்ந்து சந்த்திது, குடும்பச் சிகிச்சை அணுகுமுறையையும், குழு உளப்பிணி சிகிச்சை முறையையும் கலந்து கொடுக்கப்படும். சிகிச்சை முறை,

English

Intervention procedures used by social workers, family therapists, and other professionals to help couples resolve their relationship, communications, sexual, economic, and other family problems. There are many theoretical orientations, treatment models, and therapy techniques. The major theoretical approaches currently used by social workers include the psychosocial, behavioral, and systems orientations. Treatment models include conjoint therapy, concurrent therapy, collaborative therapy, and couples group therapy.