market strategy
சந்தையைச் சார்ந்த வியூகம் / வினைமுறைத் திறம், சந்தையில் வெற்றியடைவதற்கான செயல்திட்டம், வியூகம்
தமிழ் விளக்கம்
இங்கே சந்தையென்று குறிக்கப்படுவது தேவை மற்றும் தேவைப்பூர்த்தி சமநிலையை அரசு தலையீடில்லாமல் செய்யும் தனியார் முயற்சிகளைக் குறிக்கும். ஒருநாட்டின் சுதந்திரமான பொருளாதார அமைப்புகளால் (தனியார் நிறுவனங்களால்), மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் இல்லாமலும், அதைச் சார்ந்த விரிவான, அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் இல்லாமலும், தேவைப்படும் சமூகசேவைகளை நேர்மையான முறையில் தடங்கல் இல்லாமல் தனியார் முயற்சிகளாலே செய்துதரமுடியும் என்ற சமூகநலக் கொள்கை சார்ந்த அனுமானம் / நம்பிக்கை. சமூகநலத் தேவைகளை சந்தையே பூர்த்தி செய்யும் என்ற கருத்து. சமூக நலத் தேவைப்பூர்த்தி தனியாரால் இயக்கப்படும் சந்தையைச் சார்ந்து இருக்கும் பட்சத்தில் அது வசதியானவர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும், சமூக சேவைகளை விலைகொடுத்து வாங்கமுடிந்த சிலருக்குத்தான் பயன்படும் என்று சிலர் இந்தக் கருத்தை மறுக்கின்றார்கள்.
English
In social welfare policy development, the premise that the nation's free economic institutions can provide needed social services without distracting from the work ethic, without the need for extensive public service delivery systems, and without centralized planning. Critics of this strategy contend that this method of delivery of benefits will favor those with the most resources and deprive those who have the greatest disadvantages. See also social marketing.