marriage encounter
மணமானவர்களின் சந்திப்பு
தமிழ் விளக்கம்
Encounter என்ற சொல்லாடல் பல பொருள் கொண்டது. எதிர்த்து நிற்றல், எதிர்பாராத முறையில் எதிர்ப்படுதல், பகைமையோடு எதிர்த்து நிற்றல், போராடுதல், தற்செயலாகவோ திட்டமிட்டோ சந்தித்துக் கொள்ளல் போன்ற பலபொருள் தரும் சொல். சமூகப்பணியிலும் உளப்பகுப்பாய்விலும், உளப்பிணி சிகிச்சையிலும் இச்சொல் குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தப்படுகிறது. தங்களைத் தாங்களே விமர்சனம் செய்து கொள்ளும்படியான சூழலுக்கு உட்படுத்தி, தங்களுடைய அகஉணர்வுகளையும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, சமூக நுண்ணுணர்வை வளர்ப்பதன் மூலம், பிறரோடு இணக்கமாக வாழ நிபுணர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் குழவில் சேர்ந்து பயிற்சி பெறுவது. Marriage Encounter என்பது மணமான பலதம்பதிகள் ஒன்றுகூடி, தங்களுடைய மணவாழ்க்கைப் பிரச்சனைகளைப் பரஸ்பரம் கண்டடையவும், பிணக்குகளைத் தவிர்க்கும் வழிமுறைகளைத் தங்களின் பரஸ்பர வாழ்வு அனுபவங்களிலிருந்து தெரிந்துகொள்ளவதை நோக்கமாக கொண்ட தம்பதியர் குழு.
English
An encounter group comprising several married couples who explore feelings, mutual understandings, and conflict resolution to improve their relationships.