Marsh Report
மார்ஷ் அறிக்கை
தமிழ் விளக்கம்
பேராசிரியர் லியோனார்டு சார்லஸ் மார்ஷ் (1906-1982) - பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் சமூகப் பணிதுறையில் பணியாற்றிவர். இவர் கனடா அரசின் புனரமைப்பு ஆலோசனைக்குழுவின் வேண்டுகோளுக்கினங்க, இவர் தலைமையில் தயாரிக்கப்பட்ட கனடாவின் சமூகப் பாதுகாப்பு என்ற அறிக்கை, கனடாவில் சமூக நலன் குறித்து செய்யப்படவேண்டிய பல முயற்சிகளை விரிவாகப் பரிந்துரைத்திருந்தது. அது இங்கிலாந்தில் பிவரீஜ் அறிக்கையைப் (Beveridge Report) போன்று கனடாவில் சமூகப் பாதுகாப்பு முறைகளில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது.
English
The 1943 recommendations by Canadian social workers and others that were a major factor in the development of Canada's present social welfare system.