Marxism
மார்க்சியம்
தமிழ் விளக்கம்
மார்க்சிசம் (Marxism) என்பது கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியமானது, இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும். முந்தைய தத்துவங்கள் அனைத்தும் உலகத்தை விமரிசிக்க மட்டுமே செய்தன. ஆனால் மார்க்சியம் மட்டுமே உலகத்தை விமர்சித்ததோடு உலகை மாற்றவும் வழிமுறைகளைப் பரிந்துரைத்தது. அதனால் மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைச் சித்தாந்தமாக அமைகிறது. மார்க்ஸீயம் பரிந்துரைத்த சோசலிச சமுதாயத்தில், ஒரு வர்க்கம் இன்னெரு வர்க்கத்தையோ, ஒரு மனிதன் இன்னெரு மனிதனை சுரண்டுவதற்கான அடிப்படையே இல்லாத சமுதாயமாக இருக்கும். தனிச்சொத்துடைமை ஒழிக்கப்பட்டு, மக்கள் அனைவருக்கும் பொதுவான, அதாவது அரசுக்குச் சொந்தமான சொத்தும், உழைக்கும் மக்களின் கூட்டுச் சொத்தும் சுரண்டலுக்கு இடந்தராத வகையிலான சொத்தும் மட்டுமே சோசலிச சமுதாயத்தில் நீடிக்கும். ஒவ்வொருவரும் தனது சக்திக்கேற்ற அளவுக்கு உழைப்பதையும் தங்களிடைய உழைப்புக்கு ஏற்ற அளவுக்குப் பலனையும் அடைவதற்கான வாய்ப்பு அப்போது ஏற்படும்.
English
The sociopolitical ideology, based on the work of Karl Marx (18181883) and Frederick Engels (1820-1895), that advocates a classless society so that the efforts of workers (proletariat) are no longer exploited by those who control the means of production ( bourgeoisie). In the Marxist scenario, a class struggle and revolution leads to the overthrow of capitalism, which is temporarily replaced by a socialistic system of dictatorship of the workers, and finally by the classless society known as communism. The scenario has been influential in the political and economic systems of many nations but has never been fully realized, usually stopping at the dictatorship of the proletariat stage.