matching grants
ஈடான உதவித்தொகை, இணை உதவித்தொகை, ஈடான மானியம், சரிசமமான / எதிரான மானியம்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கோ, செயலுக்கோ நிதிதிரட்டவும், நிதி ஒதுக்கீடு செய்யத் தூண்டவும் காரணமாக அமையும் நடைமுறை. இதன்படி முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களிலோ, செயல்களிலோ ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில், அந்தத் ஒதுக்கீட்டிற்கு இணையான நிதியைத் தன் பங்களிப்பாகத் தருவதாக நிதி உதவி தரும் நிறுவனம் அளிக்கும் உத்தரவாதம். இந்த நடைமுறையைக் கையாண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் நிதி வழங்கும் பிறநிறுவனங்கள், ஸ்தல ஸ்தாபன (உள்ளாட்சி அமைப்புகள்) அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகளை, சில திட்டங்களை நடைமுறைபடுத்த ஊக்கமளிக்கின்றன. இது இரண்டு தரப்பிற்கும் பயன் அளிக்கக்கூடிய செயல். சிறுநிறுவனங்களுக்கு நிதி கிடைக்கும் என்ற உத்தரவாதமும் பெரு நிறுவனங்களுக்கு தாங்கள் விரும்பிய நோக்கங்களை அடையப் பாதி அளவு செலவு செய்தால் போதும் என்ற நிலையில் நிதிச் சுமை குறைகிறது.
English
A procedure for raising funds and motivating organizations to allocate funds for certain programs. To raise funds, a contributor promises to give the organization an amount of money that is equal to or a percentage of the amount received from other sources during a specified period. Federal and state governments also use the procedure to motivate localities to develop certain programs by promising to give a specified amount of money for every dollar the locality contributes.