maternity benefits
பேறுகாலச் சலுகைகள், மகப்பேறுகால நன்மைகள / பயன்கள்
தமிழ் விளக்கம்
பெண்கள் கர்ப்பமடைந்தால் கர்ப்பகாலத்திலும், பிரசவித்த பின் சில காலம் வரையிலும் இயல்பாக இயங்க முடியாதாகையால் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு இவ்வுதவி மிக முக்கியம். தாய்மைப் பேறு அடைந்த மகளிருக்கு வழங்கப்படும் பொருளாதார உதவியும், மருத்துவ உதவிகளும் மகப்பேறுகால நன்மைகள் என்று வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு மகப்பேறுகால விடுமுறை, காப்பீட்டு வசதிகள், தாய் சேய் நலத்திட்டங்கள் என்று பல்வேறு தகுதியினடிப்படையில் இலவச உதவியாகவோ அல்லது சலுகைகளாகவோ பல அரசாங்கங்கள் வழங்கி வருகின்றன.
English
The provision of cash and social and health services to new mothers. Many nations, not including the United States, provide such benefits to all new mothers regardless of their economic status. See also demogrant and family allowance.