maternity homes

பேறுகால இல்லங்கள், பிரசவ விடுதி

தமிழ் விளக்கம்

பேறுகால இல்லங்கள் என்பது பொதுவாக மருத்துவர் கண்காணிப்பில் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்ட இடங்களைக் குறிக்கும். ஆனால் அமெரிக்காவில் இது திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு, அவர்களின் இயல்பான சூழலிருந்து சற்று விலகிய, கன்னித் தாய்மார்களுக்கே உரிய மனக்குழப்பங்களுக்கு ஆலோசனை கூறி, அவர்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் நலஉதவிகளை வழங்கி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை அவர்கள் விரும்பும் பட்சம் தத்தெடுக்க ஏற்பாடு செய்து, அவர்களை மீண்டும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் இணைத்துவிடும் சிறப்புப் பணிகளைச் செய்யும் தற்காலிகத் தங்குமிடங்களைக் குறிக்கும்.

English

Temporary residential facilities for unwed mothers that often provide counseling, social services, health care, and education as well as shelter away from the expectant mother's usual environment during the pregnancy. Some maternity home personnel help facilitate adoption, abortion, reintegration into the community, and financial assistance.