maternity leave

மகப்பேறு விடுப்பு

தமிழ் விளக்கம்

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்திலும், பிரசவித்த பின்னும் கொடுக்கப்படும் மகப்பேறு விடுப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. பல நாட்டு அரசுகளும், பல முதலாளிகளும் முழுச் சம்பளத்துடன் கூடிய பலமாத விடுப்பும், விடுப்பையடுத்து பணியில் தொடர ஒப்புதலும் அளிக்கின்றார்கள். பலர் சம்பள இழப்புடன் கூடிய விடுமுறையையும், இன்னும் பலர் விடுமுறையை மறுப்பதுடன், நோய் விடுப்பில் செல்ல மட்டும் அனுமதிக்கின்றார்கள். மகப்பேறு விடுமுறையென்பது பெண்களுக்கான உரிமையென்றும், அதை மறுப்பது பெண்கள் மீது காட்டப்படும் பாரபட்ச நடத்தையென்றும், ஆரோக்கியமான இனப்பெருக்க நிகழ்விற்கும், ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பிற்கும் மகப்பேறு விடுமுறை முக்கியமானது என்று உலகம் முழுக்க சமூகப்பணியாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

English

Time off from employment during pregnancy and the neonatal period. Maternity leave policies vary widely. Some employers grant several months off before and after the birth with full pay and restoration of the job on return. Others permit virtually no paid time off or grant only a few days of "sick leave." Most social workers have long argued for more generous maternity leave policies, saying that their absence discriminates against women or does not recognize that the nation's future well-being depends on encouraging healthy reproduction. See also parental leave and Family and Medical Leave Act (FMLA).