Mayors' Conference

மாநகராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

அமெரிக்க மாநகராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பானது, மாநகராட்சிகளின் பிரச்சனைகளையும், நகரங்களுக்கும் மத்திய அரசிற்குமான தொடர்புகளையும் பற்றி தேசிய அளவில் விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டு, 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேம்பட்ட பெருநகரங்களின் தலைவர்களையும், பணியாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு, 1933 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்து சந்தித்து, பெருநகரப் பிரச்சனைகளான வீடின்மை, பொருளாதார நலிவு, இனவேற்றுமை மற்றும் துவேஷம், வேலைவாய்ப்பு உருவாக்கம், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுச் சுகாதார வசதிகள் போன்றவற்றைப் பற்றி விவாதித்து திட்டமிடவும், அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு நகரத் தேவைகளைப் பற்றி தெளிவுபடுத்தி, பெருநகரங்களின் வளர்ச்சிக்கு முனைகிறார்கள்.

English

The U.S. Conference of Mayors, an organization founded in 1933 of mayors and staffs of the nation's larger cities (over 30,000 population), whose primary function is to provide a national forum for discussions about federal-city relationships and urban problems. Members meet regularly to coordinate plans and educate political officials about issues including homelessness, economic blight, racial segregation, employment opportunity, transportation, and sanitation.