McKinney Act

மெக்கென்னி சட்டம்

தமிழ் விளக்கம்

ஸ்டீவர்ட் மெக்கென்னி என்ற பாராளுமன்ற உறுப்பினாரால் வீடற்றவர்களுக்கு உதவிசெய்யக் கொண்டுவரப்பட்ட 1987 ஆம் ஆண்டுச் சட்டம். வீடற்றவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும், அடிக்கடி இடம்பெயர்பவர்களாகவும், சமூக முக்கியத்துவம் இல்லாதவர்களாகவும், உறவு மற்றும் உணர்வு ஸ்திரமில்லாதவர்களாகவும் இருப்பார்கள். உதவி கிடைத்தால்தான் இவர்களால் தங்களுடைய நிலையை மேம்படுத்திக் கொள்ளமுடியும். வீடற்றவர்களுக்காக அரசோ, தனியாரோ தங்குமிட வசதிகள் தரவும், இத்தங்குமிடங்களில் படுக்கை, உணவு, தேவைக்கேற்பக் கொடுக்கப்படும் மருத்துவம் மற்றும் பிற உதவிகளை இதை நிர்வகிப்போர் தங்கள் வசதிப்படி கொடுப்பார்கள். இதற்கு அமெரிக்க அரசின் நிதியுதவி கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அமுல்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட திட்டம், பிரச்சனையின் தீவிரத்தால் மேலும் நீட்டிக்கப்பட்டது. பின்னர் நிதி உதவி குறைக்கப்பட, பெரும்பாலான நிறுவனங்கள் தனியார் நன்கொடைகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பையே அதிகம் சார்ந்து இயங்குகின்றது.

English

A federal homeless assistance program based on legislation passed in 1987 (Stewart B. McKinney Homeless Assistance Act, P.L. 100-77) to provide access to social services, nutrition, housing services, and especially health care for homeless persons. The program was to end in 1989 but was renewed. As funding cutbacks reduced most of its programs, they were supposedly taken over by voluntary and philanthropic organizations.