McNaughten rule

மெக்நாட்டின் விதி

தமிழ் விளக்கம்

மெக்நாட்டின் விதி என்பது குற்றம் சுமத்தப்பட்டவர் அப்பாவியா அல்லது மனநிலை பிறழ்ந்தவரா என்பதை நீதிமன்றங்கள் முடிவுசெய்ய உதவும் சட்ட வழிமுறைகளாகும். இந்த வழிமுறைகள் டேனியல் மெக்நாட்டின் (Daniel M'Naghten) என்ற பிரிட்டிஷ் தச்சுத்தொழிலாளி, மனப்பிறழ்வு நிலையில் எட்மண்ட் டிரம்மண்ட் (Edward Drummond) என்ற அரசு அதிகாரியைக் கொலை செய்த வழக்கில், மெக்நாட்டின் செய்த குற்றத்தின் தன்மையைப் பற்றிய விவாதங்களிலிருந்து பெறப்பட்டதாகும். மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட நபர், தான் என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தான் செய்யும் காரியத்தின் விளைவைப் பற்றி அறியாமலும் செய்வதால் அந்தக் குற்றத்திற்கு அவர் பொறுப்பாக முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மிகுந்த பரபரப்பை உண்டாக்கிய இந்தத் தீர்ப்பு உளப்பிணியாளர்கள் (பைத்தியக்காரர்கள் - insane) கணநேர உணர்ச்சித் தாக்குதலுக்குள்ளாகி ஒரு செயலின் விளைவறியாது குற்றமிழைப்பதால், குற்றப்பொறுப்பிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்களிக்கும் குற்றவியல் நடைமுறை உருவானது. இந்த வழக்கிற்குப் பின் குற்றம் சாட்டப்பட்டவர் மனப்பிறழ்வு விளைவினால் அக் குற்றத்தைச் செய்தாரா என்று கண்டறியும் சோதனை (அடக்கமுடியாத உணர்ச்சி சோதனை - irresistible impulse test) முறைகள் உருவாகி, மனப்பிறழ்வு நிலையிலிருந்து குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அக்குற்றப் பொறுப்பிலிருந்து அவர் நீதி மன்றத்தால் விடுவிக்கப்படலாம் என்ற நிலை சிறுது சிறிதாக உருவானது.

English

A set of legal principles for the guidance of courts in helping to determine whether or not a defendant may be declared innocent by reason of insanity. Based on the 1843 British case of Daniel McNaughten, the accused is considered not responsible for the crime if "laboring under such a defect of reason from disease of the mind as not to know the nature or quality of the act; or, if he did know it, that he did not know that what he was doing was wrong." Some jurisdictions use different criteria for judgments in insanity pleas. For example, the American Law Institute's formulation states that "a person is not responsible for criminal conduct if at the time of such conduct as a result of mental disease or defect he lacks substantial capacity either to appreciate the wrong fulness of his conduct or to conform his conduct to the requirements of law." See also Durham rule and irresistible impulse test.