means test
செல்வ ஆதாரம், வருவாய் வழிவகை, துணை வருவாய் வகை தகுதியறிதல்
தமிழ் விளக்கம்
உதவி கோரி விண்ணப்பிக்கும் வாடிக்கையாளரின் வருமான வழிவகைகளை ஆராய்ந்து, குறிப்பிட்ட உதவியைப் பெறத் தகுதியானரா என்பதைத் தீர்மானித்தல். விண்ணப்பதாரரின் வருமானம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருக்கும் பட்சம், அந்த விண்ணப்பதாரரால் சேவைகளைப் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென்று தீர்மானித்து உதவிகளைப் பெற தகுதி இழந்தவராகக் கருதப்பட்டு, அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மருத்துவ உதவி (Medicaid), குடும்பங்களுக்கான தற்காலிக உதவி (Temporary Assistance to Needy Families (TANF), உணவு மானிய அட்டை / கூப்பன் (Food Stamp program) போன்ற திட்டங்கள் வருமானத் தகுதியினடிப்படையிலே வழங்கப்படுகிறது. இச்சோதனையில் ஈடுபடும் சமூகப்பணியாளர்கள், விண்ணப்பதாரரின் வருமானம், சொத்துக்கள், கடன்கள், வேறு பொருளாதாரப் பொறுப்புகள், அவர் பராமரிக்க வேண்டிய நபர்கள், அவருடைய உடலாரோக்கியம் போன்ற பலவற்றையும் ஆராய்தரறிந்தபின் தகுதியை தீர்மானிக்கின்றார்கள்.
பார்க்க: income test - வருமானத் தகுதி, வருமான அளவுகோல் - ஒருவரின் வருமான வழிவாய்ப்புக்ளை (வருமானம், சொத்துக்கள் மற்றும் பிற ஆதாரங்கள்) கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், ஒருவரின் பிரகடனப்படுத்தப்பட்ட (வருமான வரி கட்டுவதற்காகத் தெரிவிக்கும் வருமானம்) வருமானத்தைத் தகுதியாக வைத்து நலத்திட்டப் பயன்களை வழங்குதல்.
பார்க்க: income test - வருமானத் தகுதி, வருமான அளவுகோல் - ஒருவரின் வருமான வழிவாய்ப்புக்ளை (வருமானம், சொத்துக்கள் மற்றும் பிற ஆதாரங்கள்) கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், ஒருவரின் பிரகடனப்படுத்தப்பட்ட (வருமான வரி கட்டுவதற்காகத் தெரிவிக்கும் வருமானம்) வருமானத்தைத் தகுதியாக வைத்து நலத்திட்டப் பயன்களை வழங்குதல்.
English
Evaluating the client's financial resources and using the result as the criterion to determine eligibility to receive a benefit. The client applying for certain economic, social, or health services will be turned down if the investigator determines that the person has the "means" to pay for them. Programs and services that use the means test to determine client eligibility include Medicaid, Temporary Assistance to Needy Families (TANF), and the Food Stamp program. To make means test evaluations, the social worker usually considers the client's income, assets, debts and other obligations, number of dependents, and health factors. See also income test.