median

கணிதம் மற்றும் புள்ளியியலில், எண்களின் இடைநிலையளவு அல்லது இடையம்

தமிழ் விளக்கம்

median என்பது எண்களை ஏறு அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தினால் நடுவில் உள்ள எண்களைக் குறிக்கும். எண்களின் ண்ணிக்கை ஒற்றையாக இருந்தால், நடுவில் உள்ள இராசி இடைநிலையளவாக அமையும். எண்களின் எண்ணிக்கை இரட்டையாக இருந்தால், நடுவில் உள்ள இரண்டு எண்களின் கூட்டுச்சராசரி இடைநிலையளவாக அமையும். எடுத்துக்கொள்ளப்பட்ட தரவின் உயர்பாதியைக் கீழ்பாதியிலிருந்து பிரிக்கும் மதிப்பாக இடைநிலையளவு இருக்கும்.

English

A measure of central tendency, the point in a distribution that has the same number of scores above and below it. Its advantage over the mean in reporting statistical data is that it is unaffected by a few extreme scores.