mediation

இடை நின்று இணைத்தல்; நடுவராயிருந்து இணக்குவித்தல், சந்து செய்தல், இருதரப்பிடையே இசைவைப் பெறுதல், இரு தரப்பிடையே ஓத்திசைவை / ஒத்த உணர்வை உண்டாக்குதல், பஞ்சாயத்து, சாமாசிகம்

தமிழ் விளக்கம்

கருத்து வேற்றுமையுள்ள இரண்டு தரப்பினருக்குமிடையே, வேற்றுமையை அகற்றி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கச் செய்து, பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளும்படியான உடன்பாட்டிற்குச் சம்மதிக்க வைக்கும் முயற்சியே மத்தியஸ்தம் எனப்படுகிறது. மனிதர்களுக்கிடையே ஒத்திசைவு நாடும் சமூகப்பணியாளர்களின் மதிப்பீடுகளும், திறமைகளும் அவர்களைப் பல சிக்கலான மத்தியஸ்தப் பணிகளில் ஈடுபடவைக்கிறது. வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு இருப்போர் அமைப்புகளுக்கு இடையிலும், அருகாமையில் குடியிருக்கும் மக்களுக்கிடையேயும், இடைக்காலத் தங்குமிடங்களில் ஏற்படும் பிரச்ச்சனைகளிலும், பணியாளர் மற்றும் நிர்வாகத்திற்கிடையே ஏற்படும் பிணக்குகளிலும், விவாகரத்தை எதிர்நோக்கும் தம்பதிகளுக்கு மத்தியிலும், விதண்டாவாதமாக விவாதிப்பவர்களுக்கு மத்தியிலும், சமூகப்பணியாளர்களைச் சிறந்த மத்தியஸ்தர்களாக ஆக்கியிருக்கின்றது.

English

Intervention in disputes between parties to help them reconcile differences, find compromises, or reach mutually satisfactory agreements. Social workers have used their unique skills and value orientations in many forms of mediation between opposing groups (for example, landlordtenant organizations, neighborhood residents halfway house personnel, labor-management representatives, or divorcing spouses). See also conciliation; mediation, divorce; and adversarial process.