mediation, divorce
விவாகரத்திற்கான மத்தியஸ்தம், மணவிலக்கு பெறுபவர்களிடையே மத்தியஸ்தம் செய்து வைத்தல்
தமிழ் விளக்கம்
விவாகரத்து, மணவிலக்குப் பெறவிரும்பும் தம்பதிகளுக்கு நீதிமன்ற நடைமுறைகளிலிருக்கும் தர்மசங்கட நிலையைத் தவிர்த்து, நீதிமன்றத்திற்கு வெளியே சமூகப்பணியாளர்களால் அல்லது வழக்கறிஞர்களால், தம்பதிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மணமுறிவு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுப்பது. சில நாடுகளில் நீதிமன்றங்களின் மேற்பார்வையில் இந்த மாதிரியான மத்தியஸ்தத்திற்கு ஏற்பாடு செய்வதுமுண்டு. இந்த மாதிரியான மத்தியஸ்த நடைமுறைகளில் தம்பதிகள் தங்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள உதவி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வைத்து, இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அவர்களுடைய உடமைகளையும், விவகாரத்திற்குப் பின்னான குழ்ந்தைகள் பராமரிப்பு பொறுப்புக்களையும் தீர்மானிக்க உதவி, அவர்களின் கடந்த கால கசப்பு உணர்வுகளை நீர்க்கச் செய்து, அவர்கள் நட்பு ரீதியாகப் பிரிய உதவுவது.
அமெரிக்காவின் சில மாநிலங்களில் மத்தியஸ்தம் நீதிமன்றங்கள் ஆதரவின் கீழ் ஏற்படுகிறது. ஆனால் வேறு சில மாநிலங்களில் அது ஒரு தனியார் சேவையாகச் செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் சில மாநிலங்களில் மத்தியஸ்தம் நீதிமன்றங்கள் ஆதரவின் கீழ் ஏற்படுகிறது. ஆனால் வேறு சில மாநிலங்களில் அது ஒரு தனியார் சேவையாகச் செய்யப்படுகிறது.
English
A procedure used by social workers, lawyers, and other professionals to help settle disputes between divorcing couples outside the courtroom adversarial process. In some states mediation occurs under the auspices of the courts, but in other localities it is done as a private service. The goals include helping the couple make mutually acceptable compromises, understand the nature of their marital difficulties, agree on equitable distribution of possessions, make custody arrangements for the children, and disengage emotionally from the unhealthy parts of the relationship.