mediator role
மத்தியஸ்தர் பணி / பொறுப்பு
தமிழ் விளக்கம்
தனி மனிதர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்கள் அதிகாரம் பெறுதலதென்பது, அவர்கள் தங்களுக்கிடையேயான பிணக்குகளைத் தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளும் திறணில்தான் அடங்கியுள்ளது என்பது சமூகப்பணியின் அடிப்படை நம்பிக்கையாதலால், சமூகப்பணியாளர்கள் இயல்பிலே பிணக்குகளை மத்தியஸ்தம் செய்வதில் ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். மத்தியஸ்தம் செய்வதென்பது, சட்டம் தவிர்த்த பிற மாற்று வழிகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டடைவதுதான். பிணக்குள்ள இருதரப்பினரை ஓரிடத்தில் கூட்ட முடிந்தவராகவும், மத்தியஸ்த செயல்முறைகளைப் பற்றியும், மத்தியஸ்த்தினால் வரும் நன்மை பற்றியும், அதில் தன்னுடைய பங்கு மற்றும் பிறரின் பங்கு எப்படியிருக்கவேண்டுமென்பது பற்றி தெளிவாக எடுத்துச் சொல்ல முடிபவராகவும், இரு தரப்பினரிடையே தொடர்பாடலை ஒருங்கிணைத்து, இயல்பாக்குபவராகவும், தெளிவற்ற விளக்கங்களுக்கு விளக்கமும், மறுவிளக்கமுமளித்துப் புரிதலை மேம்படுத்துபவராகவும், இருதரப்பு முன்வைக்கும் கருத்துக்களில் உள்ள நியாயத்தைச் சட்டம் மற்றும் பிற வழக்கங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதை அறிந்திருப்பாவாராகவும், இருதரப்பு நியாயங்களில் உள்ள எதார்த்ததைப் புரிந்திருப்பாராகவும் மத்தியஸ்தர் இருக்கவேண்டும்
English
An activity of the social worker or family therapist who sometimes acts as a go-between in getting various members of the family to communicate more clearly and fairly with one another. This role is not the same as in divorce mediation. See also conciliation.