Medicaid

மருத்துவ உதவி

தமிழ் விளக்கம்

மருத்துவமனை சென்று சிகிச்சை பெற செலவழிக்க இயலாதவர்கள் என்று தகுதிச் சோதனைகள் மூலம் (குறைந்த வருவாய்ப் பிரிவினர்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, அரசே மருத்துவச் சிகிச்சைக்கான செலவினங்களைத் தந்துதவும் திட்டம். சுகாதாரப் பணிகள் நிதியத்தின் மேற்பார்வையில் அமெரிக்காவின் மத்திய, மாநில அரசுகளின் நிதிஉதவியுடன் உள்ளாட்சி அமைப்புகள் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துகின்றன. துணை வருமானப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள், அந்தந்த பகுதி சமூகப்பாதுகாப்பு அலுவலகங்கள் மூலம் இந்தத் திட்டத்தின் பயனைப் பெறுவர்.

English

The means-tested program established in 1965 that provides payment for hospital and medical services to people who cannot afford them. Funding comes from federal and state governments under the auspices of the Health Care Financing Administration (HCFA). In most areas, administration of the program is handled through local public assistance offices. Supplemental Security Income (SSI) recipients may also be helped with Medicaid applications in their local social security offices.