medical model

மருத்துவ மாதிரி

தமிழ் விளக்கம்

மருத்துவ மாதிரி என்பது லெயிங்ஸ் என்பவரால் குறிக்கப்பட்ட, நோயைப் பற்றி கேட்டறிதல், அதன் வரலாறறிதல், உடல் பரிசோதனை, தேவைப்படின் துணைப் பரிசோதனைகள், அதையொட்டி நோய் கண்டறிதல், சிகிச்சை, சிகிச்சைக்குப் பின் நோய் குணமடைதல் கணிப்பு போன்ற செயல்களைக் குறிக்கும். நோயின் அறிகுறிகளும், அதனால் ஏற்படும் அவஸ்தையும் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகிறது என்ற நோக்கில் நோயாளியை தனியனாக்கி அனுகியது. மருத்துவர்களின் இந்த அணுகுமுறையைச் சமூகப்பணியாளர்கள் கடைப்பிடிக்கும் போது, அது சமூகப்பணியின் மருத்துவ மாதிரியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அணுகுமுறையில் வாடிக்கையாளரின் பிரச்சனை நோய்க்கு இணையாகவும், அந்தப் பிரச்சனை அவரின் உள்ளார்ந்த உடல் மன இயக்கத்தால் ஏற்படுவதாகவும், அதைக் கண்டறிந்து, அதற்குப் பெயரிட்டு சிகிச்சை அளிக்க முற்படுவர். இந்த அணுகுமுறை வாடிக்கையாளரை மட்டும் மையப்படுத்தி, அவரின் சுற்றுச் சூழலையும், பிற தொடர்புகளையும் கவனித்தில் கொள்ளாது.

English

A social work approach to helping people that is patterned after the orientation used by many physicians. This includes looking at the client as an individual with an illness to be treated, giving relatively less attention to factors in the client's environment, diagnosing the condition with fairly specific labels, and treating the problem through regular clinical appointments.