medical social workers

மருத்துவ சமூகப்பணியாளர்கள்

தமிழ் விளக்கம்

மருத்துவ சமூகப்பணியாளர்கள், சமூகப்பணியாளர்களில் ஒரு பிரிவினர். ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்புகளில் பணியாற்றும் இவர்கள் நோயாளிகளின் சமூக உளவியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்வதுடன், நலம் பெறுவதில் நோயாளிகளின் சமூக உளவியல் தேவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை, பிற சுகாதாரப் பணியாளர்களிடம் ஏற்படுத்த முயல்வர். எடுத்துக்காட்டாக, ஒருநோயாளியை முன்னதாகவே மருத்துவ சிகிச்சையிலிருந்து விடுவிக்க ஒரு மருத்துவர் திட்டமிட்டால், சிகிச்சைப் பின்கவனிப்பை நோயாளியின் குடும்ப உறுப்பினர்களே பார்த்துக் கொள்வதா, அப்படி இயலாத பட்சத்தில் தன்னார்வத் தொண்டரை ஏற்பாடு செய்வதா போன்ற செயல்களில் மருத்துவருக்கு உதவுவார்.

English

Professional social workers employed in health care settings, primarily to provide for the psychosocial needs of patients and alert other health care providers to the social needs of the patients. For example, in a hospital setting the medical social worker might facilitate the doctor's plan for early discharge of the patient by implementing a program of family and volunteer home care.